ஜெய் மிகவும் அர்ப்பணிப்பான நடிகர் – மிர்ச்சி சிவா!

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் கூறியதாவது..,

இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இந்த படம் பார்ப்பவரை சீட் நுனிக்கு கூட்டிவரும். நான் மகிழ்ச்சியுடன் இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஜெய் மற்றும் அதுல்யா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்கள் இருக்கிறது. பாடல்வரிகள் சிறப்பாக வந்துள்ளது.

நடிகை அதுல்யா கூறியதாவது..,

“இந்த படம் இயக்குநர் வெற்றி உடைய கடின உழைப்பால் ஆனது. நடிகர் ஜெய் உடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெய் கூறியதாவது..,

“இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள். நன்றி.

 

மிர்ச்சி சிவா கூறியதாவது..,

இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments