என்னது அவதார் 2 தமிழ்நாட்டுல வெளியாகாதா? திடீர் சிக்கலால் சோகத்தில் ரசிகர்கள்!

2009ம்‌ ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் செய்த சம்பவம்தான் அவதார் திரைப்படம். இப்படம் வெளியாகி அதுவரையில் இருந்த உலக சினிமா சாதனைகளையும் முறியடித்தது. இதுவரை ரசிகர்கள் காணாத ஓர் உலகை காண்பித்தார் கேமரூன். பண்டோரா உலகம், பறக்கும்‌ பாறைகள், வித்தியாசமான பறவைகள் என நம்மையும் அந்த உலகத்திற்குள் அழைத்துச்சென்றார். அத்தகைய திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவதார் 2 என இந்த மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு உள்ளனர். அதுவும் இம்முறை தண்ணீருக்குள் நடக்கும் கதையாக எடுத்துள்ளார் கேமரூன்.

தமிழகத்தில் இப்போதே இப்படத்திற்காக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் தியேட்டரில் எல்லாம் ஒரு டிக்கெட் விலை 500, 1000ஐ தாண்டுகிறது. ஆனால் நிலைமையை பார்த்தால் படம் இங்கு வெளியாகுமா என்ற‌ சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் வெளியிட விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறதாம். இதனால் இதன் வெளியீட்டு உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிகமான பங்குத் தொகை கேட்கிறார்கள் என்கின்ற பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 70% கேட்கிறார்கள் என்கின்றனர். யார் வெளியிட்டாலும் இந்த தொகைதான் கேட்பார்கள் என்பதால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வளவு தொகை எல்லாம் தரமுடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் அவதார் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்பட்டு படத்தை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments