“ருத்ரன்” மிரட்டல் லுக்கில் ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தின் மிரட்டலான இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் வெற்றி தயாரிப்பாளரான 5 ஸ்டார் கதிரேசன் முதன்முறையாக திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். மேலும் இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது. கையில் பாட்டிலுடன் கோபமாக லாரன்ஸ் அமர்ந்திருப்பது போன்ற வெளியிடப்பட்டுள்ள இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ருத்ரன் இந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments