‘ராக்கெட்ரி’ திரைப்படத்தை இளைஞர்கள் பார்க்க வேண்டும் – “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த்!

 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி‌ எடுக்கப்பட்டுள்ள படம் ராக்கெட்ரி. இப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என‌ பல்வேறு மொழிகளில் கடந்த வாரம் வெளியாகியது. இப்படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மாதவனின் இயக்கம் மற்றும் நடிப்பு, நம்பி நாராயணனின் வாழ்வில் அனுபவித்த துயரங்கள் ஆகியவை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டி உள்ளார்‌. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்

ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள் . நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி , தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி , இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும் , பாராட்டுக்களும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதற்கு நடிகர் மாதவன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments