ஜனநாயகன் பட விவகாரம் – ரஜினிகாந்த் சொன்ன பதில்!
ஜனநாயகன் பட விவகாரம் – ரஜினிகாந்த் சொன்ன பதில்!
![]()
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்றார்.. அங்கு இரண்டு நாள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு தேதி பட தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்யும் என்றார்.
மேலும் நானும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றவர் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்காதது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். நடிகர்களை பார்ப்பதற்கு சென்று கீழே விழுந்து அடிபட்டால் காயம் என்னவோ அவர்களுக்கு தான் ஏற்படும். தமிழ்நாட்டில் மாணவர்கள் படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், படிக்கும் நேரத்தில் அந்த நேரத்தை தவற விட்டார்கள் என்றால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் முதலில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமை ஆகக்கூடாது. இந்த பழக்கத்தினால் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும். அவர்கள் வாழ்க்கை மட்டும் இல்லாமல் அவரது தாய், தந்தை, குடும்பத்தினர் வாழ்க்கையும் நரகம் ஆகிவிடும்.
கெட்ட பழக்கங்கள் உடைய நண்பர்களிடம் சேராமல் அவர்களை விட்டு தூரமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

