“வந்தியத்தேவன்” கார்த்தியின் தோற்றம் வெளியானது!
மணிரத்னம் இயக்கத்தில் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் இணைந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தற்போது வெளியாகிவருகின்றன.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது அனைவரும் அறிந்ததே. முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

நேற்று ஆதித்ய கரிகாலனான விக்ரமின் தோற்றம் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் இன்று வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் முக்கியமான பாத்திரமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் கார்த்தியின் தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

