Letterboxed பட்டியல் – இரண்டாம் இடம் பிடித்த “கடைசி விவசாயி”!
உலகத் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான லெட்டர்பாக்ஸ்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலக அரங்கில் வெளியான படங்களை லெட்டர்பாக்ஸ்டு என்ற இணையதளம் தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களை அந்நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.
அதில் தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த ”கடைசி விவசாயி” திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆறாவது இடத்தையும், கமலின் ’விக்ரம்’ திரைப்படம் 11-வது இடத்தையும் பிடித்துள்ளன.

