தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் ஐ.டி.‌ ரெய்டு!

பிரபல சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருவான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கலைப்புலி தாணு, அன்புச்செழியன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகிய 4 சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்த நிலையில், அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் காலை 5 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்புச்செழியனைத் தொடர்ந்து தமிழ் திரைத்துறையின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி தாணுவின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய இருவரது அலுவலகங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருவது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments