மீண்டும் தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாரதிராஜா!

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா நலம்பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். சிறிது காலம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் பாரதிராஜா. அவர் இல்லாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது சற்று உடல்நலம் தேறிய பாரதிராஜா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதுகுறித்து தங்கர் பச்சான் கூறும்போது

படப்பிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன். பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments