மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இயக்குனர் பாரதிராஜா!

பாரதிராஜா நலமுடன் இருப்பதாகவும் பழைய பாரதிராஜாவை விரைவில் அனைவரும் பார்க்க இருப்பதாக பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குனர் பாரதிராஜா இன்று குணமடைந்து வீடு திரும்புகிறார், இது குறித்து மருத்துவர்கள் குழு மற்றும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இயக்குனர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் பேட்டி

இயக்குநர் பாரதிராஜா உடல் நிலை நன்றாக, ஆரோக்கியமாக உள்ளது. பழைய பாரதிராஜாவை நீங்கள் பார்க்கும் அளவிற்கு இருக்கிறார் என்ற அவர், பணத்திற்கு வழி இல்லமால் மருத்துவமனையில் இருப்பதாக தவறான செய்தி சில ஊடகங்களில் வெளியாகி வருவதாகவும், தவறான செய்தியை பரப்ப வேண்டும் என்றார். மேலும்,
என்னுடைய பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாரதிராஜா இப்போதே படபிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்,
அவருக்கு எல்லாமே சினிமா தான், சினிமா தான் அவருடைய சுவாசம் எனவும் அவருக்கு உடல் நிலை சரி இல்லமால் இருந்தால் 4, 5 படத்தின் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும், அவருக்கு தொலைபேசி அதிகமாக கொடுக்கவில்லை திரை பிரபலங்கள் நிறைய பேர் தொடர்ந்து அவரை நேரில் வந்து சந்தித்தாக தெரிவித்த அவர், சிகிச்சையில் இருக்கும் போது அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டு காட்டினோம் மீண்டும் திருச்சிற்றம்பலம் படம் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டதாகவும் விரைவில் அவர் குணம் அடைந்து அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எம்ஜிஎம் மருத்துவமனையில் மருத்துவர்கள் சுவாமிகண்ணு மற்றும் சபாநாயகம்

இயக்குநர் பாரதிராஜா நுரையீரலில் கடுமையான பாதிப்போடு மருத்துவமனைக்கு வந்தார், தற்போது முழு குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருப்பதாகவும், தொடர் பரிசோதனை மட்டுமே அவருக்கு தேவைப்படுவதாகவும், மீண்டும் 5 நாட்களுக்கு பிறகு பரிசோதனைக்கு வர வேண்டும் என்றார். மேலும், வயது முதிர்வு காரணமாக தான் அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்ப்பட்டதாகவும், அதுவும் தற்போது சரி செய்யப்பட்டது அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் விரைவில் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

திருச்சிற்றம்பலம் படத்தை மிகவும் பிடித்து படம் என்வும் அந்த படத்தைப் பற்றி பேசினால் உற்சாகமாகி விடுவதாகவும், அவன் நடித்த படத்தில் அவருக்கு எந்த படம் பிடிக்கும் என்று கேட்ட பொழுது அனைத்து படங்களும் என்னுடைய குழந்தைகள் தான் எனவும் அதில் சிறந்த குழந்தை என்று எதையும் குறிப்பிட முடியாது என பாரதிராஜா தெரிவித்தாக கூறினார். மேலும், பாரதிராஜா மருத்துவமனையில் இருக்கக்கூடிய செவிலியரிடம் டான்ஸ் ஆட தெரியுமா என்று கேட்டு, அவரே நடனமும் ஆடி காட்டினார் என தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments