தோனி தயாரிக்கும்‌ தமிழ்ப் படம் “Let’s get married” – ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்!

தோனி தயாரிக்கும்‌ தமிழ்ப் படம் “Let’s get married” – ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தமிழ் படத்தை தயாரிக்கிறார். தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தை அவரது மனைவி சாக்ஷி தோனி நிர்வகிக்கிறார்.

முதல் தமிழ் படத்தை தயாரிக்கப்படுவதை ஏற்கனவே அறிவித்திருந்த தோனி தற்போது படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்குகிறார்.
இவர் தோனி நடித்த அனிமேஷன் நாவலான அதர்வா தி ஆர்ஜின் என்ற காமிக்ஸ் நாவலை எழுதியவர். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments