பிக்பாஸ் வெற்றியாளர் ஆனார் அசீம் – நெட்டிசன்கள் அதிருப்தி!

பிக்பாஸ் வெற்றியாளர் ஆனார் அசீம் – வன்மத்தை கக்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிறைவடைந்து விட்டது. 105 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு விக்ரமன், அசீம், ஷிவின் உள்ளிட்டோர் தேர்வாகினர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் ஆசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 வழங்கப்பட்டது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் விக்ரமனுக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவிக்கு இதுதான் வேலை மக்களின் வாக்குக்கு மதிப்பளிப்பதில்லை. விக்ரமன் தான் உண்மையான வின்னர் என்றெல்லாம் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூன்றாம் இடம் வந்த ஷிவினுக்கும் ஆதரவுக் குரல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே ஆணாதிக்க மனோபாத்துடனும் மற்றவர்களை மதிக்கத் தெரியாத குணத்துடனும் அசீம் நடந்துகொண்டது பார்வையாளர்களை முகம்சுழிக்க வைத்தது. ஆனால் அதுவே பலரை அசீமின் ரசிகர்கள் ஆனார்கள். விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்ததால் அவரை வெற்றிபெறச் செய்யாமல் சாதியரீதியான வன்மத்தை பார்வையாளர் தீர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments