பிரம்மாஸ்திரா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது !

இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது !

கேசரியா பாடல் இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளில் கிடைக்கிறது.

கேசரியா பாடல் சமூக ஊடகங்களில் புயலை கிளப்ப, ஒரு சில வினாடிகளே எடுத்தது. இந்த பாடலின் டீசர் டிராக் ஏற்கனவே ரீல்களில் கோலோச்சி வரும் நிலையில், அயன் முகர்ஜியின் மகத்தான உருவாக்கத்தில், சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாஸ்திரா பாடல் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்த பாடல் வாரணாசியின் மலைத்தொடர்களில் படமாக்கப்பட்டது, இது இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகும். இப்பாடலின் இனிமையான மெல்லிசை மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள் காரணமாக இசை வரிசையில் முதலிடம் பெறுவது உறுதி. இந்த பாடல் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றிற்காக பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், படத்திலிருந்து வெளியாகும், ஒவ்வொரு டீஸரும், அது பாடலாக இருந்தாலும், விஷுவலாக இருந்தாலும் அல்லது ‘தி வேர்ல்ட் ஆஃப் அஸ்ட்ராஸ்’ பற்றிய சமீபத்திய கான்செப்ட் வீடியோவாக இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஒரு டீஸர் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலைப் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பாடலின் புத்துணர்ச்சி பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலித்தது. எண்ணற்ற இதயங்களைத் தொட்ட ஒரு பாடலை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் முழு பாடலின் அனுபவத்தை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நடிகை ஆலியா பட் கூறுகையில்,

 

“என்னைப் பொறுத்தவரை, கேசரியா என்பது ஒருவர் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும்போது அனுபவிக்கும் ஒரு உணர்வு. இது பிரம்மாஸ்திரம் சிவா பாகம் ஒன்றிலிருந்து வெளியாகும் முதல் பார்வை இது எனக்கும் முழு குழுவினருக்கும் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாகும். நான் கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் என்னை ஈர்க்கிறது, இப்பாடல் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். ”

இந்த ரொமாண்டிக் பாடலை அசல் ஹிந்தி பதிப்பில் பாடியது வேறு யாருமல்ல, அரிஜித் சிங், அவரது அழகான குரலில், அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர், வாத்தியக்கலைஞர், கிதார் கலைஞர் ப்ரீதம் உடைய மெல்லிசை இசையமைப்பில் இப்பாடல் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமிதாப் பட்டாச்சார்யா எழுதிய பாடல் வரிகளுடன், கணேஷ் ஆச்சார்யாவின் நடன அமைப்பில்,
துடிப்பான மற்றும் வண்ணமயமான பின்னணியில், முன்னணி நடிகர்களான ரன்பீர்-ஆலியாவைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் புன்னகை தவழும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments