எல்லா படத்தையும் திரையரங்கிற்கு சென்று பார்க்க சபதம் எடுத்து கொள்வோம் – டைரக்டர் மோகன் ராஜா!

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் ‘பேட்டரி’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

டைரக்டர் மோகன் ராஜா பேசும்போது கொரானாவிற்கு பிறகு இது தான் முதல் மேடை. 3 வருடங்களாக உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் வருத்தப்பட்டேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நடிகர் சிரஞ்சீவையை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

அனுபவம் எப்போதும் தோல்வியடையாது. அதுபோல, இப்படக் குழுவினர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இயக்குனர் மணிபாரதியால் தான் வேலைக்காரன் படத்தில் சினேகா பாத்திரம் உருவாகியது. அப்படத்தில் முழுக்க முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார்.

இளமை புதுமையைத் தரலாம் ஆனால், அனுபவம் தான் அழுத்தத்தைத் தரும். கொரோனா இன்னும் சவாலாக போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். கூட்டமாக வந்து திரையரங்கிற்கு வந்து ஊக்கவிக்க வேண்டும். மக்கள் பல படங்களை இது நன்றாக இருக்கும் என்று கணித்துக் கொண்டு போய், அது தவறாகப் போனதும் உண்டு. அதேபோல இப்படத்தையும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள் என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments