துணிவு ரிலீஸ் தேதி அறிவிப்பு – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் துணிவு. வலிமை படத்தை அடுத்து மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது துணிவு திரைப்படம். இந்த பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இப்படம்.

பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்றீங்க ஆனா தேதியை மட்டும் ஏன்டா சொல்லமாட்டீங்கிறீங்க என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர். இந்த நிலையில் வரும் 11ம் தேதி துணிவு படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

மீண்டும் அஜித்தை பெரிய திரையில் பார்க்கும் ஆவலில் அனைவரும் உள்ளனர். ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனை பொங்கல் திரையரங்குகளில் பார்க்கலாம் என்று தெரிகிறது. இந்த பொங்கல் துணிவு பொங்கலாக இருக்குமா என்று 11ம் தேதி தெரிந்து விடும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments