“ஜெயிச்சுட்டோம் மாறா” – 5 விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று!
68வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமா சார்பில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது. மேலும் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் இரண்டு விருதுகளையும் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது.

சூரரைப்போற்று சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த பின்னணி இசை ஜிவி.பிரகாஷ்குமார், சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகள் பெற்றது. சிறந்த பிராந்திய மொழி படமாக வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேர்வானது. சிறந்த துணை நடிகை விருதை அதே படத்திற்காக லட்சுமி பிரியா பெற்றார். இப்படத்தின் எடிட்டருக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது கிடைத்தது.

சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனகர்த்தா ஆகிய விருதை மண்டேலா படத்திற்காக மடோன் அஸ்வின் பெற்றார்.

