ஏலே செத்த பயலுகளா நான் நல்லாத்தாம்ல இருக்க – ஸ்ருதிஹாசன் கடுப்ஸ்!

 

என்னைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தாம் நன்றாக இருப்பதாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் பிசீஓஎஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவர் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவியது.

 

இந்நிலையில் இன்று இதற்கு விளக்கம் அளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சிலநாட்களுக்கு முன்னால் எனக்கு பிசிஓஎஸ் பிரச்சினை இருப்பதாக பதிவிட்டிருந்தேன். ஆனால் நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments