பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி – ‘பிக்பாஸ்’ ராஜு!

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்த்கொண்டவர் நடிகர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் பட்டம் வென்றதோடு அனைவரது இதயத்தையும் வென்றுவிட்டார். இந்நிலையில் இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்

அன்புள்ள உங்களுக்கு வணக்கம் ! பல கனவுகளோடும் … சினிமா ஆசைகளோடும் … ஆண்டுதோரும் சென்னை மண்னில் நம்பிக்கை அடியெடுத்து வைக்கும் பல கோடி சாமான்யர்களுள் நானும் ஒருவன் . இன்று உங்கள் ஆசியாலும் அரவணைப்பாலும் தொலைக்காட்சி துறையிலும் , திரை துறையிலும் உங்கள் மனதிலும் ஓர் இடம் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி . இன்று பிறந்த நாள் காணும் எனக்கு அளவற்ற அன்பை அள்ளி தந்திருக்கும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் . முன்னேர எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சருக்காமல் இருக்க கைபற்றி துணை நின்ற நண்பர்கள் , திரை பிரபலங்கள் , தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பளர்கள் , இயக்குனர்கள் , உடன் நடித்த கலைஞர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் , பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத மக்களிடமும் என்னை சென்றடையச்செய்த யூ – டியூப் சேனல்கள் , மீம் கிரியேட்டர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments