வெளியானது வாரிசு ட்ரெய்லர் – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜூ திரும்ப திரும்ப நம்பர் 1, நம்பர் 1 என சொன்னது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. தமன் இசையில் பாட்டு எல்லாமே பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகப் பெரிய தீணியாக இருக்கிறது. விஜயின் குறும்புகள், ஆக்ஷன் என பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக வம்சி இயக்கியுள்ளார் என்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. அதுவும் இல்லாமல் ட்ரெய்லரில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் நெறியாக உள்ளன.

எது எப்படியோ இந்த பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக்கொண்டு இருக்கிறது. படம் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளது. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

