சதீஷ் இப்படி சொல்வது சரியில்லை – நடிகை தர்ஷா குப்தா வருத்தம்!

நடிகர் சதீஷ் விளக்கமளித்த வீடியோவை நடிகை தர்ஷா குப்தா மறுப்பு
சதீஷ் இப்படி சொல்வது சரியில்லை!,நடிகை தர்ஷா குப்தா வருத்தம்
ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தாவை நடிகர் சதீஷ் ஆடை கலாச்சாரம் பற்றி விமர்சித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், நடிகர் சதீஷ் அந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்தும் தான் பேசியது தர்ஷா குப்தா அவர்களின் அனுமதியுடனும் நகைச்சுவைக்காக பேசியதும் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை தர்ஷா குப்தா பதில் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது குறிப்பிட்டுள்ளதாவது.

நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகின்றார், இது மிகவும் விசித்திரமான ஒன்று. யாராவது அவர்களைப் பற்றி அவர்களே மேடையிலே அசிங்கமாக பேச சொல்வார்களா?, எனக்கும் நீங்கள் அன்று பேசியது மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நான் அதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி மாற்றி சொல்வது சரியல்ல என்று அவர் பதிவிட்டுள்ளார்.

