நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு!

 

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த கம்யூட்டர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த தெறி படத்தில் நைனிகா நடித்திருந்தார்.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் உயிரிழந்தார். காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.
இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted