ஆதித்ய கரிகாலனாக விக்ரமின் தோற்றம் வெளியானது!

 

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அமரர் கல்கியின் சாகாவரம் பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குனர் மணிரத்னம் சினிமாவாக எடுத்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவைட்டரையராக சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். ராஜா கெட்டப்பில் கம்பீரமாக இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments