பாலா – சூர்யா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது!
இயக்குனர் பாலா வழக்கமான படங்களை தவிர்த்து புதுமையான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இவரது படங்கள் அனைத்துமே விளிம்புநிலை மனிதர்கள் யாரும் கவனிக்கப்படாத மனிதர்களை பற்றியே இருக்கும். பத்து படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அனைத்துமே முத்துக்கள் தான். வாங்கிய விருதுகள் ஏராளம். கடைசியாக துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தை இயக்கினார். ஆனால் படம் திருப்தியாக இல்லை எனக்கூறி அப்படியே கைவிட்டு விட்டார் விக்ரம்.
அதன்பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க தயாரானார். ஜீவி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யாவிற்கும் பாலாவுக்கும் மனஸ்தாபம் என தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று பாலாவின் 56வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு வணங்கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.