பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் விமர்சனம்!
பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் விமர்சனம்!
ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் வெச்சிருக்கற பிரதீப் ரங்கநாதனோட மாமாதான் சரத்குமார்.. அமைச்சராக இருக்காரு.. அவரோட பொண்ணு மமிதா பைஜூ.. ஒருமுறை பிரதீப் கிட்ட மமிதா தன்னோட லவ்வ சொல்றாங்க.. ஆனா பிரதீப் அதை நிராகரிச்சுடறாரு.. இதனால் மனமுடையுற மமிதா மேற்படிப்புக்காக வெளியூருக்கு போய்டறாங்க.. அவர பிரிஞ்சு இருக்குற பிரதீபுக்கு மமிதா மேல லவ் வருது.. இதை பிரதீப், சரத்குமார்கிட்ட சொல்ல உடனே ஓகே சொல்ற அவர் திருமண ஏற்பாடுகள செய்யறாரு.. ஆனா திடீரென எனக்கு இந்த திருமணத்துல விருப்பம் இல்ல நா வேற ஒருத்தர லவ் பண்றன்னு மமிதா, பிரதீப்கிட்ட சொல்றாங்க.. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? இரண்டு பேருக்கும் திருமணம் நடந்துதா? சரத்குமாரோட முடிவு என்ன அப்படிங்கறதுதான் இந்த படம்..
Gen z தலைமுறையினரை குறிவைத்து மறுபடியும் ஒரு பக்கா படத்த கொடுத்திருக்காரு பிரதீப் ரங்கநாதன்..
ரகளையாக தொடங்குற படம் கொஞ்சம் நேரத்துக்கு அப்படி இப்படி போகுது.. ஆனா அதுக்கு அப்புறமா இன்டர்வெல் வரைக்கும் ஜெட் வேகத்துல காமெடி சரவெடிதான்.. அதுவும் சரத்குமார், பிரதீப், மமிதா சேர்ந்து கல்யாண வீட்டுல நடத்துற அட்டகாசம் சூப்பர்..
பிரதீப் வழக்கம் போல தன்னோட டிரேட் மார்க் நடிப்புல அசத்தி இருக்காரு.. படத்தோட ஆரம்பத்துல தன்னோடா எக்ஸ் கல்யாணத்துல போய் ரகளை செய்யுற சீன் வேற லெவல்.. தாலிய டைட்டா கட்டியிருக்க கூடாதா ப்ரோ அப்படி சொல்லும்போது அரங்கம் அதிருது.. காமெடி, லவ், சென்டிமென்ட் என தன் நடிப்பால படத்த அடுத்த கட்டத்துக்கு பிரதீப் கொண்டு போய்ட்டாரு..படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதி இருக்கிறாரு இயக்குநர் கீர்த்தீஸ்வரன். 2025 காலகட்டத்திலுமே சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுது என்பதை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் நச் என்று சொல்லியிருக்காரு இயக்குனர்..
மமிதா பைஜு ஆரம்பத்துல அழகா வந்து க்யூட்டான முகபாவனைகளால ரசிக்க வைக்குறாங்க.. அப்படியே இரண்டாம் பாதில அழுத்தமான நடிப்பால கலங்கடிச்சிருக்காங்க..
சரத்குமாருக்கு இது சூப்பர் கேரக்டர் என்று சொல்லலாம்.. தான் வர்ற ஒவ்வொரு காட்சிலயும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறாரு.. பரிதாபங்கள் திராவிட் செல்வம், ரோஹினி, ஹீரோயினின் காதலராக வரும் ஹிர்து ஹாரூன் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செஞ்சிருக்காங்க..
சாய் அபயங்கரின் இசையில சில பாடல்கள் ரசிக்க வைக்குது, பின்னணி இசையில படத்துக்கு வலு சேர்த்திருக்காரு.. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகள கொடுத்திருக்கு.. படத்தோட பிரச்சினை இரண்டாம் பாதியிலதான் இருக்கு.. முதல் பாதி எந்த அளவுக்கு கலகலப்பாக இருந்துச்சோ அதே அளவுக்கு இரண்டாம் பாதியில ஏகப்பட்ட சொதப்பல்கள்.. அது சொல்லப்பட்ட கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றே சொல்லலாம்.. ஒருவேளை இன்றைய தலைமுறையினருக்கு அதுதான் பிடிக்கும் என்று இயக்குனர் எடுத்திருக்காரோ என்னவோ..
ஹீரோவை அதிகம் புகழும் காட்சிகளும், எவ்ளோ அடிச்சாலும் இவன் தாங்குவான் போன்ற ஓவர் எமோஷனல் காட்சிகளும் சற்று அயற்சியை கொடுக்குது.. கிளைமாக்ஸ் ஓகே.. குறைகள் இருந்தாலும் இந்த தீபாவளிக்கு சொல்லி அடிச்சிருக்கு இந்த டியூட்..