நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வந்தவர் பிரதாப் போத்தன்.
பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன்.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன்.
இவர் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயதிலேயே தமிழ்நாட்டுக்கு வந்தவர். காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்த இவர் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார். காலேஜில் நிறைய மேடை நாடகங்கள்ல நடித்துள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். வயது 69. அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.