டீசல் திரைப்பட விமர்சனம்!
டீசல் திரைப்பட விமர்சனம்!
ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிற டீசல் படம் எப்படி இருக்கிறது?..
1979ல் மத்திய அரசு சென்னையில் ஒரு திட்டம் கொண்டுவருகிறது.. அது என்ன என்றால் வடசென்னை கடற்கரை பகுதியில் குருடாயில் பைப் லைன் அமைக்கிறார்கள்.. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களுடைய படகுகளை கடலுக்குள் எடுத்துச் செல்லமுடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது..இதனால் ஹீரோ ஹரிஷ் கல்யாணின் வளர்ப்பு அப்பா சாய்குமார், குருடாயில் பைப் லைனில் சட்டவிரோதமாக ஓட்டையை போட்டு ஆயில் திருடி வருகின்றனர்.. இதனால் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதியை வடசென்னை மக்களின் வாழ்க்கை தரத்திற்காக செலவு செய்கிறார்.. அது அப்படியே 2014 வரைக்கும் தொடர்ந்து.. ஹரிஷ் கல்யாணும் அதே குருடாயில் கடத்தலை மிக சாமர்த்தியமாக செய்து வருகிறார். இந்த நிலையில் இவங்களுக்கு போட்டியாக டிஜிபி வினய்யோட உதவியோட விவேக் பிரசன்னா, நாயகனோட டீமுக்கு போட்டியாக இந்த தொழில் செய்கிறார். இவங்களுக்கு உள்ள நடக்கும் தொழில் போட்டி.. தன்னோட சுயலாபத்துக்காக மீனவ மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த துடிக்குற கார்ப்பரேட் முதலாளியை ஹீரோ எப்படி எதிர்த்தார்.. கடைசில் மீனவர்களோட வாழ்வாதாரம் என்ன ஆனது என்பதே இந்த படத்தோட கதை..
முதல்முறையா ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் களமிறங்கி இருக்காரு.. வட சென்னை இளைஞனாகவே மாறியிருக்காரு.. கெட்டிக்காரன் அதே சமயம் தன்னோட மக்களுக்காக போராடுறதுன்னு நல்லாவே ஸ்கோர் செஞ்சிருக்காரு.. இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சா முழுநேர ஆக்ஷன் ஹீரோ ஆகலாம்.. போலீஸ் அதிகாரியாக வில்லத்தனத்துல மிரட்டியிருக்காரு வினய்.. ஏற்கனவே பலமுறை பார்த்த அதே போலீஸ் கேரக்டர்தான் என்றாலுமே அவரோட நடிப்பு ரசிக்க வைக்குது.. சாய்குமார், கருணாஸ், அதுல்யா ரவி, விவேக் பிரசன்னா உள்ளிட்டவங்களோட நடிப்பும் நல்லா இருக்கு.. தங்கதுரை, மாறன் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்குறாங்க..
ரிச்சர்ட் எம் நாதனோட கேமரா வொர்க் சூப்பரா இருக்கு.. நிறைய பிரம்மாண்ட விஷுவல் மூலமா நல்ல காட்சி அனுபவத்த கொடுத்திருக்காரு. திபு நைனன் தாமஸோட மியூசிக்ல பாடல்கள் ஏற்கனவே ஹிட்டு. பின்னணி இசையும் ஆக்ஷன் படத்துக்கு தேவையானத செஞ்சிருக்கு.. நீண்ட நாட்கள் தயாரிப்புல இருந்த படம் அப்படிங்கறதால சில சீன்ஸ் ஜம்ப் அடிக்குது.. நல்ல கதையை எடுத்துக்கிட்ட இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி அதை பரபர திரைக்கதையோடு விறுவிறுப்பா சொல்ல நினைச்சிருக்காரு.. அதுக்காக நிறைய ஆய்வுகளையும் செஞ்சிருக்கறது படத்துல தெரியுது. ஆனாலுமே பல இடங்கள்ல லாஜிக் மிஸ் ஆகுது. உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சு படத்த எடுத்திருக்காரு.. ஓரளவுக்கு ரசிக்கவும் வெச்சிருக்காரு..
மொத்தத்துல திரைக்கதையில இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தா இந்த டீசல் பத்தவெச்ச பட்டாசாக பட்டையை கிளப்பியிருக்கும்..