“பாட்டல் ராதா” திரை விமர்சனம்!

பாட்டல் ராதா திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் குரு சோமசுந்தரம் இவரின் தேர்ந்தடுக்கும் கதைகள் அனைத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் அந்த வகையில் பாட்டல் ராதா படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பாட்டல் ராதா.

“மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்கிறார்கள். ஆனால் உண்மையில், ‘பாட்டல் ராதா’ குடி தனிமனிதனின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவன் சார்ந்திருக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் செய்யும் தீங்கைப் பற்றி அழகாக இப்படம் சொல்லியுள்ளது.

ஹீரோ, குரு சோமசுந்தரம், கட்டிட தொழிலாளி, பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் வாழ்க்கையில் பயணிக்கிறார். அவரது கனவு உலகம் என்றாவது ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கையில் அவருடன் கைகோர்க்கிறார் கதாநாயகி சஞ்சனா நடராஜன். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாயகனின் குடிப்பழக்கத்தால் இந்த அழகான குடும்பம் அழிவை நோக்கி செல்வது, அதிலிருந்து கணவனை காப்பாற்ற மனைவி எடுக்கும் முயற்சிகள், அந்த முயற்சியால் ஏற்படும் விபரீதங்கள், அதிலிருந்து ஹீரோ மீள்வாரா இல்லையா என்பதை சொல்கிறது ‘பாட்டல் ராதா’.

குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பாட்டல் ராதா கதாபாத்திரத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். குடிப்பழக்கத்தால் கனவுகளை தொலைத்துவிட்டு, தான் யார் என்பதை மறந்த நிலையில், அவரது ஒவ்வொரு அசைவும் அவரது கதாபாத்திரத்திற்கும் காட்சிகளுக்கும் பெரும் பலம் சேர்க்கிறது.

குரு சோமசுந்தரத்தின் மனைவியாக வரும் சஞ்சனா நடராஜன், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவியின் பாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார்.

ஜான் விஜய்க்கு இது புதுமையான கதாபாத்திரம் அழகாக செய்துள்ளார். குறிப்பாக க்ளைமாக்ஸின் மனதைத் தொடும் காட்சியில், அவர் தனது வாழ்க்கையைப் பற்றி பேசுவது, ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் அழ வைக்கிறது.

இறுக்கமான கதைக்களம் மற்றும் திரைக்கதை இருந்தபோதிலும், லொள்ளு சபா மாறன் அதை இலகுவாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுகிறார். அவரது நல்ல நேர நகைச்சுவை வரிகள் உங்களை சத்தமாக சிரிக்க வைக்கிறது.

ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோ. மற்ற வேடங்களில் நடித்துள்ள செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், கலா குமார், அன்பரசி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வு.

ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை இயல்பாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

சோகமான கதைக்களமாக இருந்தாலும், படத்தொகுப்பாளர் இ.சங்கத்தமிழன் அதை நகைச்சுவையாகவும் அதே சமயம் இயக்குனரின் செய்தியில் பார்வையாளர்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தும் விதமாகவும் காட்சிகளை எடிட் செய்துள்ளார்.

தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய பிரசாரம் போன்ற கதையை தனது திரைக்கதையின் மூலம் சிரிக்க வைக்கும் படமாக மாற்றியது மட்டுமின்றி, சிந்திக்க வைக்கும் படைப்பாகவும் மாற்றியிருக்கிறார்.

மது அருந்துபவர்கள் என இதுவரை திரையில் பார்த்திராத பல விஷயங்களை முன்வைத்த இயக்குனர் தினகரன் சிவலிங்கம்? குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் எவ்வாறு சீரழிகின்றன? மறுவாழ்வு மையங்கள் செயல்படும் விதம், குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த கட்டம் என திரைக்கதையை அனாயாசமாக முன்னோக்கி நகர்த்தி பொழுதுபோக்குப் படமாக மாற்றுகிறது.

மொத்தத்தில் ‘பாட்டல் ராதா’ – ஸ்டெடியானவன். ரேட்டிங் 3.5/5

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments