பைசன் காளமாடன் திரை விமர்சனம்!
பைசன் காளமாடன் திரை விமர்சனம்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பைசன் காளமாடன் படத்தின் விமர்சனம் இதோ;
1995 கால கட்டத்தில் நடக்கும் கதை.. ஜப்பான் ஆகிய கோப்பை கபடி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் துருவ் விக்ரம் தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்ப்பதுடன் கதை தொடங்குகிறது.. தூத்துக்குடி மாவட்டம் வனத்தியில் கபடி வீரர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் துருவ் விக்ரம் சந்தித்த பிரச்சினைகள், அவமானங்கள், இழப்புகள், வலிகள் இதுதான் பைசன் படம்..
துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படம் இதுதான் என்று நினைத்து அத்தனை உழைப்பையும் கொட்டியுள்ளார்.. அதனை பார்க்க திரையில் அத்தனை அழகாக இருக்கிறது.. விக்ரமின் மகன் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளார். கபடி வீரனாக உடலை தயார் செய்வது, ஓடிக்கொண்டே இருப்பது, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்புவது என காலத்துக்கும் பெயர் சொல்லும் நடிப்பை கொடுத்துள்ளார்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனோட வாழ்க்கைய கொஞ்சம் புனைவு கலந்து தனக்கே உரிய பாணியில சொல்லியிருக்காரு மாரி செல்வராஜ்..படத்தில் உண்மையான ஹீரோ பசுபதிதான்.. மனுஷன் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.. சாதிய வேலில இருந்து விடுபட்டு தன்னோட மகன் ஜெயிக்க வேண்டும் அப்படிங்கிற கனவோட இருக்குற தகப்பனோட மனநிலைய கடைசிவரைக்கும் தன்னோட நடிப்பால கொண்டுவந்திருக்காரு..
இரண்டு சாதிய நபர்களாக லாலும்(வெங்கடேச பண்ணையார்), அமீரும்(பசுபதி பாண்டியன்) நடிச்சிருக்காங்க.. லால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பா நடிச்சிருக்காரு.. அமீருக்கு இது அளவெடுத்த கேரக்டர் அவரும் நல்ல நடிப்பை கொடுத்திருக்காரு.. இரண்டு கதாபாத்திரங்களையும் நேர்மையாக அனுகியிருக்காரு மாரி செல்வராஜ்.. துருவ் விக்ரமுக்கு ஆதரவு தரும் லால் கேரக்டரோட டச் நச்.. எல்லோரும் சமம் என்று தொடங்கிய சண்டைய நைசா மறந்துட்டானுங்க என்று அமீர் பேசுற வசனம் சூப்பர்.. அருவி மதனும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்காரு..
அழகம் பெருமாள், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவங்களோட நடிப்பும் நல்லா இருக்கு.. எழிலரசு கே ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்துக்கு கொண்டு போய் இருக்கு..கலை இயக்கம் மற்றும் எடிட்டிங் என தொழில்நுட்ப ரீதியா படம் க்ளாஸ்.. நிவாஸ் கே பிரசன்னா இசையில பாட்டு எல்லாம் ஏற்கனவே ஹிட்டு.. பின்னணி இசையில மிரட்டி இருக்காரு.. இது அவருக்கு பேர் சொல்லும் படம்..
திறமை இருந்தால் எத்தனை தடை வந்தாலும் நினைத்தனை அடையலாம் என்று சொல்லும் இந்த பைசன் நிச்சயம் வெல்வான்..