இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் சிகிச்சை!

 

பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். அதன் பிறகு நாயகன், அஞ்சலி, ரோஜா, தளபதி என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களை இயக்கியவர். இவர் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது‌. இதற்காக இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

மணிரத்னம் விரைவில் குணமடைந்து நலம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments