மீண்டும் அருண் ராஜா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்!

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், போனி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது.
நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது.

பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் தான் இந்த படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.
மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

