ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் 5.31 நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது!

*எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் 5.31 நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது!*

*ஜனநாயகன் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!*


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிப்பில் அவரது 69 ஆவது திரைப்படமாக தயாராகியுள்ளது ஜனநாயகன் திரைப்படம்.

அரசியல் பிரவேசம் காரணமாக விஜயின் கடைசி திரைப்படம் என சொல்லப்பட்ட ஜனநாயகன்,கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதியே திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.பிறகு சென்சார் போர்ட் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று பிறகு மறுத்தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மறு தணிக்கை முடிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக தற்பொழுது வரை அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் டைட்டில் கார்டு அடங்கிய முதல் ஐந்து நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments