ஓஹோ எந்தன் பேபி – திரை விமர்சனம்!

ஓஹோ எந்தன் பேபி – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம்தான் ஓஹோ எந்தன் பேபி.. நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகியுள்ள இந்த படத்தின் கதை என்ன என்றால்..

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனரா இருக்கும் நாயகன் ருத்ரா, நடிகர் விஷ்ணு விஷால்கிட்ட கதை சொல்ல போகிறார்.. இவர் சொன்ன இரண்டு கதையுமே விஷ்ணு விஷாலுக்கு பிடிக்கவில்லை.. ஒரு நல்ல காதல் கதையாக இருந்தால் சொல்ல சொல்கிறார். உடனே ருத்ரா தன்னோட லவ் ஸ்டோரியவே சினிமா கதையா சொல்கிறார்.. இது விஷ்ணு விஷாலுக்கு பிடிச்சு போய்விடுகிறது.. ஆனால் இடைவேளை வரைக்கும்தான் கதை சொல்லியிருக்கிறார் ருத்ரா.. ஏன் என்றால் உண்மையிலுமே ஹீரோவும் ஹீரோயினும் பிரிந்து விடுகின்றனர்.. இதனால் கதையை மேலும் தொடர வேண்டும் என்றால் ஹீரோ போய் நாயகியை பார்த்து பேச வேண்டும் அப்படின்னு விஷ்ணு விஷால் சொல்ல, அதுக்கு ருத்ரா மறுப்பு தெரிவிக்கிறார்.. இறுதியில் ருத்ரா, ஹீரோயினை பார்த்து பேசினாரா?.. படத்த எடுத்து முடித்தாரா? என்பதுதான் ஓஹோ எந்தன்‌ பேபி..

ருத்ரா முதல் படத்திலேயே நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், உதவி இயக்குநர் என தோற்றத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.. முதல் படத்திலேயே லிப் லாக் சீன் எல்லாம் நிறைய இருக்கு அவருக்கு.. எமோஷனல் சீன்ஸ்லயும் நல்லா நடிச்சிருக்கிறார். பள்ளி மாணவனாக துறுதுறு என்னு குறும்பு செய்யும் ஹீரோவாக ரசிக்க வைக்கிறார்.. நாயகி மிதிலா பால்கர் தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு அறிமுகம்.. டாக்ஸிக் குடும்ப பின்னணி கொண்ட ஒரு பெண்ணாக அவர் நடிச்சிருக்காங்க.. தன்னோட மாமா செய்யும் கொடுமைகளை பார்த்து கலங்கி நிற்கும் இவங்களுக்கு ஹீரோவும் அதையே செய்ய ரொம்பவும் உடைந்து போய்விடுகிறார். காதல், அழுகை, ஏமாற்றம் எல்லா உணர்வுகளையுமே சிறப்பா கொடுத்திருக்காங்க.. நண்பர்களாக வருபவர்களின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது..

முதல் பாதி காதல் மற்றும் நகைச்சுவையோடு படம் நகர்கிறது ..இரண்டாம் பாதி சீரியஸாகவும் கொஞ்சம் எமோஷனலாவும் போய் கிளைமாக்ஸ் ஹேப்பி என்டிங்கா முடிகிறது. விஷ்ணு விஷால் நடிகராகவே வந்து தன்னோட தம்பிக்கு வேண்டிய உதவி செய்துள்ளார்.. ரெடின் கிங்ஸ்லி, மிஷ்கின் ஆகியோரும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்..

காலமும் தூரமும் எவ்வாறு எல்லாவற்றையும் குணப்படுத்தும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இருந்தாலுமே ஒரு உறவில் மரியாதை மற்றும் அக்கறையுடன் இருக்க வேண்டும் அப்படிங்கிறதை நகைச்சுவை கலந்து கலகலப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார்.. வழக்கமான கதையாக இருந்தாலும் அங்கங்க கொஞ்சம் ரசிக்கிறமாதிரி கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில் ஓஹோ எந்தன்‌ பேபி காதலும் காதல் நிமித்தமும்..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments