தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் “கேப்டன் மில்லர்” – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்‌ கேப்டன் மில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது ராக்கி, சாணிக் காயிதம் போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்று இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி‌.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

 

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

“கேப்டன் மில்லர்” படைப்பு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது. மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளுடன் வளர்த்து வருகிறது. இந்த திரைப்படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்த திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும். உண்மையில், இந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும் கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am(பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments