சீனு ராமசாமி எனது மகன் என்று பாராட்டிய பாரதிராஜா!
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப் பறவை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்து வெளியாகியுள்ள படம் மாமனிதன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தை இயக்குனர் பாரதிராஜா பார்த்து சீனு ராமசாமியை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் என்னுடைய மண் புழுதியையும் மக்களையும் சரியாக காட்டிய இயக்குனர் சீனு ராமசாமி. இப்படத்தை பார்த்து அழுதுவிட்டேன் என்றும் சீனு ராமசாமி அனைவரையும் வென்றுவிட்டார்.

விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகன். இப்படம் விஜய் சேதுபதியை மற்றொரு உயரத்திற்கு கொண்டு சேர்க்கும். மனைவியாக நடித்த பெண்ணும் வாழ்ந்துள்ளார். உலக தமிழர்கள் இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். இயக்குனர் மீது எனக்கு பொறாமையாக உள்ளது என்று நெகிழ்ந்தார். இளையராஜா மிகப்பெரிய இசை ஞானி. அவனது மகன் யுவன் எனது நேசத்திற்குரிய பிள்ளையானவன். இளையராஜாவும் யுவன் தமிழகத்தின் சொத்து என்றவர் சீனு ராமசாமியை எனது மகன் என்று பாராட்டினார்.

