“விடுதலை” ஒரு திரைக்காவியம் – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

“விடுதலை” ஒரு திரைக்காவியம் – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

விடுதலை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இது ஒரு திரைக் காவியம் என்று பாராட்டினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாகவும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து வியந்து பாராட்டினர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று விடுதலை படத்தை பார்த்து விட்டு மனம் திறந்து பாராட்டியுள்ளார். வெற்றிமாறனின் இயக்கம், சூரியின் நடிப்பு ஆகியவற்றை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திடாத கதைக்களம். இது ஒரு திரைக் காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments