வெளியானது விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு!
வெளியானது விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் தலைப்பு!
![]()
மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் த்ரிஷா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. தற்போது இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தை போலவே ப்ரொமோ வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ப்ரொமோ வீடியோவில் விஜய் செம ஸ்டைலாக இருக்கிறார். ப்ளடி ஸ்வீட் என்ற டேக் லைனுடன் படத்தின் தலைப்பு உள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் முன்னதாக ஆயுத பூஜை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

