நாளை வரை காத்திரு நண்பா…. “தளபதி 67” படத்தலைப்பு நாளை அறிவிப்பு!

நாளை வரை காத்திரு நண்பா…. “தளபதி 67” படத்தலைப்பு நாளை அறிவிப்பு!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளது விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி. அதுவும் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளதால் தீபாவளிக்கு அதிரடி சரவெடி இருப்பது நிச்சயம் . 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்துள்ளார். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு பிளான் பண்ணியுள்ளனர். லோகேஷ் கனகராஜின் யுனிவர்சில் இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் கமல், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி எல்லோரும் இதில் இருப்பார்கள் என்கின்றனர். அப்படி இருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை சன் டிவி வாங்கிவிட்டது. இப்படி ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்துவிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன என்பதை நாளை படக்குழு அறிவிக்க உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted