வாரிசு, துணிவு சிறப்புக் காட்சிகள் ரத்து – தமிழக அரசின் உத்தரவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
![]()
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதே போன்று வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்கங்களும் விழாக் கோலம் பூண்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு திடீரென்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்பு காட்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது வருகின்ற 13 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை அதிகாலை சிறப்பு காட்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதுமட்டுமின்றி கட்அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருந்தாலும் நாளையும் 12ம் தேதியும் எந்த வித நிபந்தனைகள் இல்லாததால் இருதரப்பு ரசிகர்களும் ஆறுதல் அடைந்துள்ளனர்.

