“இரவின் நிழல்” அற்புதம் – பார்த்திபனை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இப்படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி படம் எடுத்த விதத்தில் பாராட்டப்பட்டாலும் படமாக ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. இந்நிலையில் இப்படத்தை நேற்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் ,
முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி,
“இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !” என்று பாராட்டி , பார்த்திபனையும்
படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார். முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் ‘நேற்றைய அரசியல் வரலாறு – 2092 “எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம்
வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள
திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments